கடத்தல் காரர்கள் தப்பியோட்டம்: 17 இலட்சம் பீடி இலைகளை மீட்பு!


தமிழ்நாடு தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த இருந்த 17 இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகளைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

தூத்துக்குடி தருவைகுளம் அருகே உள்ள கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து காவல்துறை ஆய்வாளர் விஜயஅனிதா தலைமையில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஜீவமணி மற்றும் காவல்துறையினர் இரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

காவல்துறையினரைப் பார்த்ததும் கடற்கரையில் இருந்த ஒரு படகு வேகமாக கடலுக்குள் புறப்பட்டு சென்றது.

காவல்துறையினர் மீனவர்களின் உதவியுடன் மற்றொரு படகில், கடலுக்குள் சென்ற படகை விரட்டி சென்றனர். அப்போது அந்த படகில் இருந்தவர்கள், மறைத்து வைத்து இருந்த மூட்டைகளை தூக்கி கடலில் வீசினர். பின்னர் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்று விட்டனர். 

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சமீப காலமாக மஞ்சள், பீடி இலை, களைக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றனமை சுட்டிக்காட்டத்தக்கது. அத்துடன் போதைப் பொருள் கடத்தலும் இடம்பெறுகிறது நினைவூட்டத்தக்கது.


No comments