நோர்வே துப்பாக்கிச் சூடு: கேளிக்கை விடுத்தியில் இருவர் பலி!


நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கேளிக்கை விடுதிக்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர் பை ஒன்றில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சூட்டை நடத்தினார் இத் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துடன் மேலும் 21 பேர் படுகாயமடைந்தனர்.

தாக்குதலானது லண்டன் பப்புக்கும் உள்ளேயும் வெளியேயும் நடத்தப்பட்டது. சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

கேளிக்கை விடுதி மற்றும் வெளியே 3 இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

தாக்குதலாளி சந்தேகநபர் ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த 42 வயதான நோர்வே குடிமகன் எனத் தெரியவந்துள்ளது. தற்போது அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குற்றம் நடந்த இடத்தில் இருந்து முற்றிலும் தானியங்கி துப்பாக்கி ஒன்றும் இன்னொரு துப்பாக்கியும்  மீட்கப்பட்டன.

நோர்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரே துப்பாக்கிச் சூடு "அப்பாவி மக்கள் மீதான பயங்கரமான மற்றும் ஆழ்ந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதல்" என்று கண்டனம் செய்தார்.

5.4 மில்லியன் மக்கள் வசிக்கும் நோர்வே, பல மேற்கத்திய நாடுகளை விட குறைவான குற்ற விகிதங்களைக் கொண்டுள்ளது.


No comments