இலங்கை அகதிகளான இரு முதியவர்கள்: மயக்க நிலையில் தமிழக கடற்கரையில் மீட்பு


இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் வாழ வாழியின்றி இராமேஸ்வரத்திற்கு இன்று திங்கட்கிழமை அதிகாலை இருவர் தஞ்சம் புகுந்தனர்.  

தஞ்சமடைந்த இரு முதியவர்கள் அகதிகளாய் கோதண்ட இராமர் கோயில் எதிரே கடற்கரையில் காலை 7 மணி முதல் தொடர்ந்து மூன்று மணிநேரத்திற்கு மேலாக மயக்க நிலையில் உள்ளனர். 

முதியவர்கள் என்பதால் உடல்நிலை மிகவும் மோசமாக உயிருக்கு ஆபத்தான சூழலில் கடற்கரையில் படுக்கையில் கிடக்கின்றனர் என்ற தகவல் அறிந்து சம்பவ இடத்தில் 5 மரைன் கால்துறையினர் முதலுதவி அளித்தனர்.

போக்குவரத்து வசதி இல்லாத மணல் பகுதி என்பதால் சாலைப் பகுதிக்கு கொண்டு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. கடலோர காவல் படை மற்றும் மரைன் ரோந்து படகுகள் எதுவும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடாததால் அகதிகள் உயிருக்கு போராடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மீனவ மக்களிடையே பெரும் மன கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments