மட்டகளப்பில் தொடர்ந்து பிடிபடும் பதுக்கி வைத்திருக்கும் எரிபொருள்கள்


அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி இராணுவச் சாவடி அருகில் 25  கொள்கலன்களுடன் உழவு இயந்திரமொன்றில் கொண்டு செல்லப்பட்ட டீசல் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைக்காக அக்கரைப்பற்றில் தெரிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்புநிலையமொன்றில் இருந்து கொண்டு செல்லப்பட்டதாக கருதப்படும் டீசல் கொள்கலன்களே இவ்வாறு பொதுமக்களால் மடக்கிபிடிக்கப்பட்டு அக்கரைப்பற்று காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டடுள்ளது.


குறித்தநிலையமொன்றினூடாக பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் இன்று திங்கட்கிழமை நண்பகல் 25 சிறிய கொள்கலன்களில் டீசல் நிரப்பப்பட்டு அக்கரைப்பற்று பிரதேசம் நோக்கி புறப்படுவதாக பொதுமக்கள் அறிந்து கொண்டதுடன் பட்டியடிப்பிட்டி இராணுவச் சாவடி அருகே ஒன்று கூடிய மக்கள் உழவு இயந்திரத்தை தடுத்து நிறுத்தி காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய போக்குவரத்து காவல்துறையினர் உழவு இயந்திரத்தை கைப்பற்றி அதில் உள்ள கொள்கலன்களில் டீசல் இருப்பதை உறுதிப்படுத்திய பின்னர் அக்கரைப்பற்று காவல்நிலையத்திற்கு உழவு இயந்திரத்தை எடுத்துச் சென்றனர்.

எனினும் காவல் நிலையம் வருகைதந்த சில விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் அவை தங்களது அமைப்பிற்கு வழங்கப்பட்டதாக தெரிவித்ததுடன் அதற்கான ஆவணங்களையும் காவல்துறையினரிடம் கையளித்தனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அக்கரைப்பற்றுகாவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.


இதேநேரம் மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 லீற்றர் டீசல், 258 லீற்றர் மண்ணெண்ணெயை காவல்துறையினர் மீட்டுள்ளன. அத்துடன் பதுக்கலுடன் சம்பந்தப்பட்ட சந்தேச நபர் ஒருரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிக்கு  குறித்த பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள கட்டிடத்தை முற்றுகையிட்டு சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின்போது பீப்பாக்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த 550 லீற்றர் டீசல், 258 லீற்றர் மண்ணெணையை மீட்டிருந்தது. 

கைது செய்யப்பட்ட நபர் விரைவில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என தெரியவருகிறது.

சம்மாந்துறையில் சந்தேகத்துக்கிடமான முறையில் வடி ரக வாகனமொன்றில் 18 கேன்களில் டீசலை கொண்டு செல்ல முற்பட்டபோது பொதுமக்களால் மடக்கிப் முற்றுகையிட்டுள்ளனர்

No comments