ஐரோப்பிய நீதிமன்ற உத்தரவு: பிரித்தானியாவிருந்து நாடு கடத்தப்படவிருந்த விமானம் இரத்து!


பிரித்தானியாவிலிருந்து ருவாண்டாவுக்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படவிருந்த நிலையில், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தலையிட்டதைத் தொடர்ந்து நாடு கடத்தப்படத் திட்டமிட்டிருந்த விமானத்தைத் பிரித்தானியா இரத்து செய்தது.

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சட்டத்தரணிகள் அரசாங்கத்தின் பட்டியலில் உள்ள அனைவரையும் நாடு கடத்துவதைத் தடுக்கக் கோரி வழக்குக்கு  முறையீடுகளை மேற்கொண்டனர். 

பிரித்தானியாவில் ஓர் இராணுவ தளத்திலிருந்து விமானம் புறப்படவிருந்து. அதில் 7 பேர் நாடு கடத்தப்படுவதற்கு தயாராக இருந்தனர்.

உள்துறைச் செயலர் பிரிதி படேல் கூறுகையில், 

நாடு கடத்தபடவிருந்த விமானம் புறப்பட முடியாமல் போனதால் ஏமாற்றம் அடைந்ததாகவும், ஆனால் சரியானதைச் செய்வதைத் தடுக்க முடியாது என்றார்.

எங்கள் சட்டக் குழு இந்த விமானத்தில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவையும் மதிப்பாய்வு செய்து வருகிறது. அடுத்த விமானத்திற்கான தயாரிப்பு இப்போது தொடங்குகிறது என்று படேல் கூறினார்.

பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் லிஸ் ட்ரஸ், விமானத்தில் எத்தனை பேர் இருந்தாலும் விமானம் புறப்படும் என்று முன்னதாக தெரிவித்திருந்தார். 

சர்ச் ஆஃப் இங்கிலாந்து தலைவர்கள் அரசாங்கத்தின் கொள்கையை ஒழுக்கமற்றது என்று கூறினர்.

பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் பிரிட்டனின் நாடுகடத்தும் திட்டத்தை உறுதியாக ஆதரித்தார். இது உயிர்களைப் பாதுகாப்பதற்கும், சிறிய படகுகளில் குடியேறியவர்களை ஆங்கிலக் கால்வாய் வழியாக கடத்தும் கிரிமினல் கும்பலை முறியடிப்பதற்கும் ஒரு முறையான வழி என்று வாதிட்டார்.

No comments