செவரோடோனெட்ஸ்கில் உள்ள உக்ரேனிய போராளிகளை ஆயுதங்களைக் கீழே போடுமாறு ரஷ்யா வலியுறுத்து

கிழக்கு உக்ரைன் நகரமான செவெரோடோனெட்ஸ்கில் உள்ள அசோட் இரசாயன ஆலையில் தஞ்சமடைந்த உக்ரேனிய போராளிகளுக்கு புதன்கிழமை சரணடைவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

நகரம் மற்றும் அசோட் ஆலை இரண்டும் சமீபத்திய வாரங்களில் மோதலின் முக்கிய பகுதிகளாக மாறியுள்ளன. நூற்றுக்கணக்கான உக்ரேனிய குடிமக்கள் மற்றும் வீரர்கள் தொழிற்சாலையில் தங்கியுள்ளனர்.


ரஷ்ய படைகளின் கடுமையான எறிகணைத் தாக்குதலின் கீழ் நகரத்தை கைப்பற்ற முயற்சித்துள்ளனர், உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில் புதன் கிழமை மனிதாபிமான நடைபாதையை திறப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. 

அத்துடன் உக்ரைன் படைவீரர்கள் மற்றும் போராளிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

ரஷ்ய ஆயுதப் படைகளும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் அமைப்புகளும் பொதுமக்களை வெளியேற்ற ஒரு மனிதாபிமான நடவடிக்கையை ஏற்பாடு செய்யத் தயாராக உள்ளன என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மனிதாபிமான நடைபாதை மாஸ்கோ நேரப்படி புதன்கிழமை காலை 8 மணி (05:00 GMT) முதல் இரவு 8 மணி வரை இருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

வெளியேற்றப்பட்டவர்கள் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள ஸ்வாடோவோ நகருக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று கூறினார்.

உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியுடன் செவெரோடோனெட்ஸ்க்கை இணைக்கும் சிவர்ஸ்கி டோனெட்ஸ் ஆற்றின் அனைத்து பாலங்களும் ரஷ்யாவால் அழிக்கப்பட்டுள்ளன.

லுஹான்ஸ்கில் உள்ள பிரிவினைவாத அதிகாரிகளின் பிரதிநிதி, விட்டலி கிஸ்லியோவ், அசோட் ஆலையில் சுமார் 2,500 உக்ரேனிய மற்றும் வெளிநாட்டு போராளிகள் பதுங்கியிருக்கலாம் என்று மதிப்பிட்டார்.

உக்ரைனில் உள்ள அதிகாரிகள் அசோட்டில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறைந்திருப்பதாகக் கூறியுள்ளனர்.

No comments