வெள்ளிக்கிழமை விடுமுறை: ஆனால் இவர்கள் வேலைக்குச் செல்லவேண்டும்!


இலங்கையில் வெள்ளிக்கிழமைகளில் அரச பணியாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதேநேரம் சில அரச பணியாளர்களுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை கவனத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், சுகாதார ,மின்சக்தி ,எரிபொருள் ,பாதுகாப்பு ,கல்வி மற்றும் இதர அத்தியாவசிய சேவைகள் அன்றையதினம் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments