78வயது மூதாட்டி:விட்டுவைக்காத பாதகர்கள்!காங்கேசன்துறை - கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்குஉட்படுத்திய பின்னரே கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தனிமையில் வசித்து வந்த மூதாட்டியான சாணை தவமணி (வயது-78) என்ற மூதாட்டி கடந்த வெள்ளிக்கிழமை கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

மூதாட்டியின் சடலம் யாழ்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்டது.


அதன் போது , மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments