சஜித் சர்வஜன வாக்கெடுப்பை கோருகின்றார்!புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு உடனடியாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய கொள்கைகளின் கீழ் நாட்டைப் பொறுப்பேற்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை அழிக்கும் அரசாங்கத்தை ஜனநாயக ரீதியில் அகற்றுவதற்கான தேசிய பிரசாரத்தை நாங்கள் செயற்படுத்தி வருகிறோம். சர்வஜன வாக்கெடுப்பை நடத்த அனுமதிக்குமாறு உங்கள் அனைவருக்கும் நாங்கள் சவால் விடுகிறோம். வாக்கெடுப்புக்கு உடனடியாக வாய்ப்பு கொடுங்கள். அப்போது நாட்டின் பிரச்சினைகளை தீர்க்கும் சிறந்த அணி எது என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள். புதிய ஆணையில் நாட்டை ஆளுமாறு மக்களைக் கேட்பதே எங்களின் பணி. நாட்டை பொறுப்பேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

No comments