இன்று அவுஸ்ரேலிய புறப்பட்ட 54 பேர் கைது!

இலங்கையிலிருந்து தப்பிப்பவர்களை கைது செய்வதில் இலங்கை கடற்படை மும்முரமாகவுள்ளது.

இன்றைய தினமும் கிழக்கு கடற்பரப்பில் மேலும் ஒரு தொகுதி நாட்டை விட்டு தப்பிக்க முற்பட்டவர்கள் அகப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில்  அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு - பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதானவர்களை திருகோணமலை - துறைமுகத்திற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments