எரிபொருள் டோக்கனிற்கு முப்படைகளாம்!இலங்கையில் முப்படைகள் வசம் எரிபொருள் விநியோகத்தை அரசு கையளிக்கவுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு விநியோகத்தை முன்னெடுப்பதற்காக, வரிசையில் நிற்கும் மக்களுக்கு டோக்கன் வழங்கும் நடவடிக்கை இன்று(27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் மக்களுக்கு முப்படையினரால் தயாரிக்கப்பட்ட டோக்கன் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இரண்டு அரசாங்க அமைச்சர்கள் இன்று ரஷ்யாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

No comments