கொலையாளியை விடுவிக்க அத்துரலியே ரத்தன தேரரே பேசினார்!

"இராஜகிரிய ரோயல் பார்க் கொலைக்குற்றவாளியை விடுதலை செய்யுமாறு அத்துரலியே ரத்தன தேரரே வந்து என்னிடம் பேசினார், அதன் அடிப்படையிலேயே அந்த குற்றவாளிக்கு பொதுமன்னிப்பை  வழங்கினேன். இந்த விடயத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதை நான் பின்னர் அறிந்தேன், ஆனால் நான் எதிலும் சம்பந்தப்படவில்லை" என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

றோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பாக நீதிமன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆஜராகிவருகின்றார்.

பொதுமன்னிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கில் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பெயரிடப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாட்டு சுற்றலா பயணி ஒருவரை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய கொலை குற்றவாளி ஜூட்ரமந்த அன்டனி ஜயமஹவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மைத்திரி மன்னிப்பளித்திருந்தார். 


No comments