ஜனாதிபதி நம்பிக்கையில்லாப்பிரேரணை:புதன் முடிவு!
இலங்கையில்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், இன்று (09) நடைபெற்ற அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம், சற்றுமுன்னர் நிறைவடைந்தது.

அதில், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒழுங்குப்பத்திரத்தில் ஒரு திருத்தத்துடன் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,   இது தொடர்பான விவாதத்தை நடத்துவதற்கான திகதியை முடிவு செய்ய கட்சித் தலைவர்கள் கூட்டம் புதன்கிழமை (11)  மீண்டும் கூடுகிறது.

No comments