மகிந்தவிற்கும் ,காஸிற்கும் ஆர்ப்பாட்டங்கள்!



பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக இன்று அலரி மாளிகையின் முன்னால் இடம்பெற்றுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மொரட்டுவ மாநகரசபையின் ஊழியர்களிற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு அவர்களை பேருந்தில் ஏற்றி அலரிமாளிகைக்கு கொண்டுசென்றதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

மகிந்தவை ராஜினாமா செய்யவேண்டாமென அவரது ஆதரவில் ஒரு வருட கால நீடிப்பில் வாழ்ந்துவரும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் கோரிவருகின்றனர்.

புதிய ஆட்சி மாற்றத்தின் கீழ் நிதி சேமிப்பை முன்னிறுத்தி சுமார் 150கோடி சேமிப்பிற்காக ஒருவருட நீடிப்பு வழங்கப்பட்ட உள்ளுராட்சிசபைகளை கலைக்க முடிவாகியுள்ளது.

இந்நிலையிலேயே மகிந்தவிற்கு ஆதரவாக அழைத்துவரப்பட்ட உள்ளுராட்சி மன்ற பணியாளர்கள் சகிதம் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.



பெரும் எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக் காரர்கள் பாத யாத்திரையாக வந்து அலரி மாளிகைக்கு அருகில் திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் எனக் கோரியே இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

இதனிடையே கொழும்பு - நீர்கொழும்பு வீதி பேலியகொட, நுகே சந்தியில் தடைப்பட்டுள்ளது.

காஸ் கோரி மக்கள் போராட்டம் நடத்தியதால் வீதி மறியல் செய்யப்பட்டுள்ளது.


No comments