மகிந்த போகாவிட்டால் நாம் வெளியே போகிறோம்!

இலங்கைப்பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ள பல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பல்வேறு கட்சிகள் ஏற்கனவே முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவி விலகாவிட்டால் நான்கு அமைச்சர்கள் பதவி விலகத் தயாராகி வருகின்றனர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அந்த வகையில், பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோளிட்டு செய்தி வெளியாகி உள்ளது

No comments