கரு ஜெயசூரியா பிரதமராகின்றார்!



இலங்கையில் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்கும் யோசனைக்கு அரசாங்கம் சாதகமாக பதிலளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் நோக்கிலும், அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்ற நோக்கத்திலும் கடந்த சில வருடங்களாக கட்சி சார்பற்றவராக செயற்பட்டு வரும் கரு ஜயசூரிய இப்பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.

கடந்த பல தசாப்தங்களாக அவ்வப்போது தோல்வியடைந்து வந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு இதுவே சிறந்த சந்தர்ப்பமாக அமையலாம் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

No comments