பிரஞ்சு அதிபர் தேர்தல்: மக்ரோன் மற்றும் மரைன் லு பென் 2வது சுற்றுக்குத் தகுதி பெற்றனர்


பிரான்சு அதிபரைத் தேர்வு செய்யும் முதல் சுற்று வாக்கெடுப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 12 அதிபர் வேட்பாளர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிட்னர். 

போட்டியின் முதல் சுற்றில் தற்போதைய அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் தீவிர வலதுசாரித் தலைவர் மரீன் லு பென் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதனால் இவர்கள் இருவரும் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் அதிபர் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

மாலை 5 மணி வரை வாக்குப்பதிவுகள் 65% ஆக இருந்தது. இது 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலை விட குறைந்த வாக்கு வீதமாக இருந்தது.

எண்ணப்பட்ட 96% வாக்குகளின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் இதோ:-

 1. இம்மானுவேல் மக்ரோன் - 27.41%
 2. மரைன் லு பென் - 24.03%
 3. ஜீன்-லூக் மெலன்சோன் - 21.57%
 4. எரிக் ஜெமோர் - 6.97%
 5. வலேரி பெக்ரெஸ்ஸி - 4.75%
 6. யானிக் ஜாடோட் - 4.49%
 7. ஜான் லாசலே - 3.25%
 8. ஃபேபியன் ரூசல் - 2.33%
 9. நிக்கோலஸ் டுபன்-ஐக்னன் - 2.12%
 10. அன்னே ஹிடால்கோ - 1.74%
 11. பிலிப் பௌடோ - 0.78%
 12. நதாலி ஆர்தாட் - 0.58%

No comments