மகிந்த இன்றிரவு பேசப்போகிறராம்!மக்களிடையே செல்லவோ பேசவோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுத்துவருகின்ற நிலையில் இன்றிரவு மகிந்த ராஜபக்ச மக்களிடையே உரையாற்றவுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து கடந்த வாரம் விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சந்தித்திருந்த நிலையில், சந்திப்பு இறுதி இணக்கப்பாட்டின்றி முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த சந்திப்பில் இடைக்கால அரசாங்கம் குறித்து முக்கியமான எதுவும் பேசப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.

இன்னிலையில் முன்னதாக கோட்டபாயவை சந்தித்த ரணில் மக்கள் முன் உரையாற்ற கேட்டிருந்தார்.

எனினும் அதனை கோத்தபாய மறுதலித்திருந்த நிலையில் மகிந்த பேச முன்வந்துள்ளார்.


No comments