கோ ஹோம் கோத்தா கிராமம் உருவானது !காலிமுகத்திடலில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளவர்கள் புதிய கிராமத்தை உருவாக்கியுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இக்கிராமத்திற்கு கோத்தா ஹோகம எனப்பெயர் சூட்டியுள்ளனர்.

இதனிடையே, தீவிரமடைந்துவரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐக்கியதேசிய கட்சியும் இணைந்துகொள்ளவுள்ளது.

தற்போதைய நிர்வாகத்தின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கியதேசிய கட்சி தனியான சத்தியாக்கிரக போராட்டங்களை முன்னெடுத்துள்ள போதிலும் இளைஞர்கள் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்துகட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதற்கு அவர்களிற்கு அனுமதிவழங்கியுள்ளார்.

அமைதியான வழிமுறைகள் ஊடாக ஆர்ப்பாட்டங்களிற்கு ஆதரவளிக்குமாறு அவர் கட்சியின் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments