பிள்ளையானிற்கு சூம் ஊடாக சிறை வாழ்க்கை!


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்), எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பில்  பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அச் சமயத்தில்,   பிள்ளையான் காணொளி  தொழில்நுட்பத்தின் ஊடாக விளக்கமறியலில் இருந்து முன்னிலைப்படுத்தப்பட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டார்.

கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில்   பிள்ளையான் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதுடன், கல்லடிப் பகுதியில் இடம்பெற்ற ஐந்து கொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments