வீசுவது குண்டுகளல்ல : பிரித் நீராம்!



வானத்திலிருந்து நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம் செஞ்சொலை நாகர் கோவில் பாடசாலையென குண்டுவீசி நரபலியெடுத்து இலங்கை விமானப்படை  தற்போது வானத்திலிருந்து ஆசி வேண்டி 'பிரித்' நீரைத் தாங்கிச் சென்று நிலத்தின் மீது தெளிக்கிறது.

உயிரினங்கள் வறண்ட வானிலையால் நாடு சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கை விமானப்படையின் விமானம் கருணையின் அடையாளமாக வானில் புனிதமான 'பிரித்' நீரைத் தாங்கிச் சென்று நிலத்தின் மீது தெளித்ததாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. 

வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு குடும்பம், விலங்கு, மரம் மற்றும் உயிருக்கும் மழை, நிவாரணம் மற்றும் புத்துணர்ச்சிக்கான மனமார்ந்த பிரார்த்தனை இது. வானம் திறக்கட்டும், பூமி செழிக்கட்டும், நம் அழகான தீவின் ஒவ்வொரு மூலைக்கும் நம்பிக்கை திரும்பட்டும். வானத்திலிருந்து பூமிக்கு மழையை வேண்டி ஒரு பிரார்த்தனையென தகவல் வெளியிட்டுள்ளது விமானப்படை.





No comments