9 கோடி அரச சொத்தாகின்றது?
போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் ரூபா 90 மில்லியன் பெறுமதியுடைய சொத்துக்களை முடக்குவதற்கு உத்தரவு இலங்கை அரசினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்கள் தொடர்பில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பணத் தூயதாக்கலுக்கு எதிரான தடுப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சொத்துக்களை, பணத் தூயதாக்கலுக்கு எதிரான தடுப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய முடக்குவதற்கான உத்தரவை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் பிறப்பித்துள்ளனர்.

Post a Comment