ஸ்ரீஞானேஸ்வரன் பயங்கரவாதத்தடுப்பு விசாரணைக்கு !
திருகோணமலையினை சேர்ந்த சிவில் செயற்பாட்டாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று கொழும்பு பயங்கரவாதத்தடுப்புப் பிரிவின் தலைமையகத்திற்கு வாக்குமூலமொன்றை வழங்க வருமாறு அவருக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு நீர்கொழும்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இனப்படுகொலை தொடர்பாக அவர் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு மற்றும் உரை தொடர்பாக ஏற்கனவே கத்தோலிக்க குரு வண. செராட் மற்றும் அருட்சகோதரி ரசீக்கா ஆகியோரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பன்னாட்டுக்குற்றங்கள் நூலின் எழுத்தாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment