ஆட்சி மாற்றத்திற்கு உதவவேண்டாம்.:சிவாஜி



 தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனைக்கான தீர்வு விடையங்களை முன்வைக்காமல் தமிழ் தேசிய கட்சிகள் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவளித்தால் அவர்களுக்கு எதிராக வீதியில் மக்களை இறக்கிப் போராட்டம் நடத்தப்படும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

திங்கட்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைக்கு முமுமையாகத் தீர்வு கான முடியாது.

தற்போது தமிழ் தேசிய கட்சிகள் இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு  ஆதரவளிக்கப்போவதாக பரவலாகக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தற்போதிருக்கும் ஆட்சியை மாற்றினால்  பிரச்சனை தீர்ந்துவிடாததோடு புதிய ஆட்சியிலும் தீராது என்பது அனைவருக்கும் தெரியும்.

நல்லாட்சி என்று சொல்லப்பட்ட ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த பல சந்தர்ப்பங்களை தமிழ்மக்களுக்காக பயன்படுத்த தவறிவிட்டார்கள்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற்கண்டு
ஆட்சி மாற்றம் தேவைப்படுவதாக பரவலாக பேசப்பட்டுவரும் நிலையில் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா என்பதை முதலில் ஆராய வேண்டும்.

ஆட்சியை மாற்றினாலும் காட்சிகளில் மாற்றம் ஏற்படப்போவதில்லை தமிழ் மக்களின் பிரச்சன தொடர்ந்தும் தீராப் பிரச்சினையாக
 காலங்கடந்து கொண்டே செல்லும்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கு
 தமிழ் தேசிய கட்சிகள் ஆயத்தம் ஆவதற்கு முன்னர் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனையை உரிய தரப்பினரிடம் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும்.

நல்லாட்சியில் கிடைத்த சந்தர்ப்பங்களை தவற விட்டது போல் தற்போதும் நிபந்தனை அல்லாமல் ஆட்சிமாற்றத்திற்கு  தமிழ் தேசிய கட்சிகள் உதவக்கூடாது.

ஜனாதிபதியை ,பிரதமர் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை முற்றுகையிட்டு தென்னிலங்கை  மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்களில் ஒரு பகுதியினர் ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறும் ஒரு பகுதியினர் 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு போகுமாறும் கோஷங்கள் எழுப்பி வரும் நிலையில் தமிழ் மக்கள் இதைப் பெரிதாக அலட்டிக்கள்ளவில்லை.

ஆனாலும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையிலலா தீர்மானம் கொண்டு வருதல் மற்றும் 20ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துதல் போன்றவற்றிற்கு வாக்கெடுப்புக்கு செல்வதற்கு தமிழ் தேசிய கட்சிகளின் வாக்குகள்  தீர்மானிக்கும் சக்தியாக அமையும்.

நல்லாட்சியில் கிடைத்த சந்தர்ப்பங்களை நழுவ விட்டது போல்  மீண்டும் செய்வதற்கு அனுமதிக்க முடியாது.

ஆகவே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் தேசியக் கட்சிகள் பேரம்பேசும் செலவின்றி பாராளுமன்றத்தில் டம்பரம் வாக்கெடுப்புகளில் ஆதரவு தெரிவிப்பார்கள் ஆனால் அவர்களுக்கு எதிராக மக்களை வீதியில் இறக்கிப் போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்

No comments