காலி முகப் போராட்டத்தில் கலந்துகொண்ட பாடகர் உயிரிழப்ப


இலங்கையின் முன்னணி ரெப் இசை பாடகரான சிராஷ் யூனூஷ், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், காலி முகத்திடல் வளாகத்தில் உயிரிழந்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கு ஆதரவளிக்கும் வகையில், சிராஷ் யூனூஷ் காலிமுகத்திடல் போராட்டத்தில் இணைந்து, பாடல்களை பாடியிருந்தார்.

இந்தநிலையில், திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தை கோட்டை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.

இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் ஆரம்பமானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அரசின் தூர நோக்கற்ற நிதி நிர்வாக முகாமைத்துவத்தால் நாடு பெரும் பொருளாதார பின்னடைவை அடைந்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

எனவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments