துப்பாக்கிசூடு பொய்யானது?ரம்புக்கனை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பொதுமக்களை இலங்கை காவல்துறை அடித்து துவைக்கும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.

போராட்டத்தை கலைப்பதற்காக ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதை இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

புகையிரத போக்குவரத்தை சீர்குலைத்து, ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதை மன்னிக்க முடியாது என சங்கம் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்க் கொள்ளும் போது பொது மக்களின் விரக்தி மற்றும் கோபம் நியாயமானது எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நியாயமானதும் வெளிப்படையானதுமான விசாரணை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமென நம்புவதாக சங்கத்தின் செயலாளரான கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

No comments