சவூதியில் ஒரு நாளில் 81 பேருக்கு மரண தண்டனை!!


சவூதி அரேபியாவில் நேற்று சனிக்கிழமை 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் போராளிகள், கொலைகள் செய்தவர்கள், பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் என பலரும் உள்ளடங்குகின்றனர்.

தூக்கிலிடப்பட்டவர்களில் அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றது உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள், அல்-கொய்தா, இஸ்லாமிய அரசு குழு உறுப்பினர்கள் மற்றும் யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதரவாளர்கள் என்றும் அரசு கூறியது.

நவீன உலகில் ஒரு நாளில் நிறைவேற்றப்பட்ட அதிக எண்ணிக்கையைக் கொண்ட மரணதண்டனை நிகழ்வாகும்.

இதற்கு முன்னர் 1979 ஆம் ஆண்டு மெக்காவில் உள்ள பெரிய மசூதியைக் கைப்பற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 63 போராளிகளுக்கு ஜனவரி 1980 இல் நிறைவேற்றப்பட்ட  மரணதண்டனையின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 17வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் உலகின் அதிக கவனம் குவிந்திருந்த நிலையில், மரணதண்டனைக்கு சனிக்கிழமையை ஏன் சவூதி அரேபியா தேர்ந்தெடுத்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

No comments