கோத்தாவிற்கு முண்டு கொடுப்பதா? இல்லையா?:தமிழரசு குழப்பம்!



நிகழ்ச்சி நிரல்கள் திட்டமிடப்படாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்க இலங்கை ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு செவ்வாய்க்கிழமை காலை கூடி முடிவு செய்யவுள்ளதாக அறிய முடிகிறது.

15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலையில் இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம் பெறவுள்ள நிலையிலேயே இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் அழைப்பின புறக்கணிக்க வேண்டுமென தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு வெள்ளிக்கிழமை அடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக பங்காளிகளது கருத்தை பெற தமிழரசு தலைமை முடிவு செய்துள்ளது

No comments