வெளிநாட்டு காசுடன் வருகிறார் சுமா!

வடமாகாணசபைக்கான விசேட நிதியமொன்றை நல்லாட்சி காலத்தில் ரணில் -மைத்திரி தரப்பு அமைக்கவிடாது தடுத்த எம்.ஏ.சுமந்திரன் தற்போது போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கென்று ஒரு விசேட அபவிருத்தி நிதியமொன்று உருவாக்குவதற்கு அரசாங்கம் இணங்கியிருக்கின்றதென தனது புதிய தொழிலை ஆரம்பித்துள்ளார்.

ஆனாலும் அது எவ்வாறு என்ற விடயங்கள் இன்னும் பேசப்படவில்லை. இது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் பேசி முதலீட்டாளர்களை எவ்வாறு வருவிப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடுவோமெனவும் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் திட்டமிடப்பட்ட வடமாகாணசபைக்கான முதலமைச்சர் விசேட நிதியம் ஆட்சி முடியும் வரை அனுமதிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. 


No comments