வாழ்க்கை செலவு :நா.உ குடும்பங்களிற்கு அன்னதானம்!



நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 1ஆம் திகதி முதல் நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்ததன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கோவிட் அபாயம் காரணமாக பார்வையாளர்கள் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

இதேவேளை, நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக விருந்தினர் உணவருந்திய அறையை திறந்து வைக்குமாறு நாடாளுமன்ற முதல்வர்கள் கேன்டீன் பிரிவுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர். நாளை முதல் பாராளுமன்றத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களும் பாராளுமன்ற உணவை சுவைக்க வாய்ப்பு உண்டு.

நாடு நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் உணவு விடுதியை மூடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களே முன்மொழிந்த போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக விருந்தினர் உணவகமும் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோவிட் தடுப்பூசியின் மூன்று டோஸ்களையும் பெற்றவர்கள் மற்றும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

No comments