நாள் முழுவதும் இருளில் இலங்கை!



 இலங்கையில்  மின்சார நெருக்கடி உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்தடை குறித்து நேற்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், 12 மணி நேர மின் துண்டிப்பு அமுலாக்க அனுமதி கோரப்பட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.

இன்று புதன்கிழமை முதல் பகல் முழு மின்வெட்டு அமுலுக்கு வந்துள்ளது

புதிய அறிவிப்பின் பிரகாரம் இலங்கை நாள்முஐவதும் இருள் வாழும் காலம் ஏற்பட்டுள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால், அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபை வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் முற்றாக நேற்று மூடப்பட்டதுடன் இன்று முதல் பல பகுதிகளில்  10 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தேவையான அளவு எரிபொருளை விநியோகிக்கத் தவறினால் அடுத்த வாரம் முதல் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்சார விநியோகத்தை துண்டிக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாரத்துக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு இதுவரை வழங்கப்படவில்லை எனவும், எனவே இன்று முதல் 10 மணித்தியாலங் களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாகவும், அவசரகால கையிருப்பு கிடைக்காவிட்டால் நேரம் மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments