உரும்பிராயில் காவல்துறைக்கு அடி உதை!

 


யாழ். உரும்பிராய் - யோகபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள், இலங்கை காவல்துறை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நீதிமன்றினால் பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்றபோது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோப்பாய்யோகபுரம் பகுதியை சேர்ந்த இருவருக்கு நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு செல்லத் தவறியமையால் நீதிமன்றினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த சென்ற  இலங்கை காவல்துறையினர்  இருவரையும் கைது செய்ய முயன்ற போது, அங்கு நின்ற கும்பல் ஒன்று இரு  கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்

No comments