உக்ரைன் மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல்


உக்ரைனின் முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்யப் படையின் நேற்றுப் புதன்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த  தாக்குதல் சம்பவம் ஒரு மைலுக்கு அப்பால் அதிர்வுகளினால் வீடுகளின் உள்ள சாரளங்களின் கண்ணாடிகள் உடைந்தன.

மகப்பேறு மருத்துவமனை மீது தாக்குதல் என்ற உக்ரைனின் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. இந்த மருத்துவமனை நீண்ட காலமாக உக்ரைன் படையினரால் கையகப்படுத்தப்பட்ட ஒரு முன்னாள் மகப்பேறு மருத்துவமனை என்று ரஷ்யா கூறியது.

இந்த மருத்துவமனையில் துப்பாக்கிச் சண்டைக்கு உக்ரைன் படையினர் பயன்பத்தியதாக மார்ச் 7 திகதி ரஷ்யா எச்சரித்திருந்ததாகவும் ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது.

மரியுபோல் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ஒன்பது நாள் முற்றுகையின் போது மொத்தம் 1,207 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அதன் மேயர் தெரிவித்துள்ளார்.

No comments