காணாமல் போன கப்பல் 107 வருடங்களின் பின் கண்டுபிடிப்பு


இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்து மிகப் பொிய கப்பல் விபத்து ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அண்டார்டிக் பகுதியில் 1915 ஆம் ஆண்டு கடல் பனிக்குள் சிக்கி கடலில் மூழ்கிப் போன எண்டூரன்ஸ் (Endurance) கப்பலை 107 ஆண்டுகளின் பின்னர்  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


காணாமல் போன எண்டூரன்ஸ் கப்பல் வெட்டல்(Weddell Sea) கடலின் அடிப்பகுதியில் 3 கிலோ மீற்றர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

கப்பல் கடல் பனியால் நசுக்கப்பட்டது 1915 இல் மூழ்கியது. கப்பல் கப்டன் எர்னஸ்ட் ஷேக்லெட்டனும் அவரது மாலுமிகளும் அங்கிருந்து சிறிய படகுகள் மூலம் தப்பி வந்தனர்.

விபத்தில் மூழ்கிய மரத்திலான கப்பல் சீர் குலைந்தாலும் அப்படியே கப்பல் வடிவத்தில் காட்சியளிக்கிறது. கப்பலி பெயர் தெளிவாகத் தெரிகிறது.


No comments