தடையில்லை:பயம் வேண்டாம்!இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக மது உற்பத்தி நிறுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் எதனோல் உற்பத்திக்கு இடையூறாக இருப்பதாக கலால் திணைக்களம் தெரிவித் துள்ளது.

சாராயம் உட்பட 23 கலால் அனுமதி பெற்ற மதுபான உற்பத்திகள் உள்நாட்டில் இயங்கி வருவதாக அதன் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவற்றிற்குத் தேவையான எதனோல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இன்னும் உள்ளூர் சந்தையில் கிடைக்கின்றன என்றும் அவர் கூறினார்.

எனவே, சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பொய்யான செய்திகளை அடிப்படையாக வைத்து சட்டவிரோதமான முறையில் மதுபானங்களைச் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments