மகிந்த ஆள் விருந்தாளி மட்டுமே? யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான பிரதமர் அலுவலக பிரதிநிதியொருவரின் பெயர் பரிந்துரை மாத்திரமே இடம்பெற்றுள்ளது. அது தொடர்பான கடிதம் எமக்கு கிடைத்துள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகின்றோமென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனின் அலுவலகம் அறிவித்துள்ளது.

எனவே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில், புதிய நியமனமொன்று இடம்பெற்றுள்ளதாக வெளியாகிய அனைத்து செய்திகளும் பொய்யானவை.

அத்தோடு, “யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கு எதிரான முறைப்பாடுகள் பிரதமர் அலுவலகத்துக்கு கிடைத்துள்ளன” என்ற செய்தி அறிக்கையிடல்களும் போலியானவை என்பதோடு,திட்டமிட்டு பரப்பப்படும் போலிச்செய்திகளே அவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த அலுவலகத்திற்கென தமிழ் தரப்பினை சேர்ந்த ஒருவர் நியமிக்க்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments