எரிபொருள் நிரப்பு நிலையங்கள்:மரண பூமியா?இலங்கையில் நாள்தோறும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மோதல்கள்,மரணங்கள் அரங்கேற தொடங்கியுள்ளது.ஏற்கனவே மண்ணெயிற்கு காத்திருந்த சிங்கள பொதுமகன் ஒருவர் மரணித்த நிலையில் மற்றுமெர்ருவர் கத்திக்குத்தில் மரணித்துள்ளார்.

ஹொரகொல்ல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் ஏற்பட்ட சண்டை காரணமாக கத்தி குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

முச்சக்கரவண்டி சாரதிக்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த கத்தி குத்துக்கான காரணம் என பொலிஸார் கூறுகின்றனர்.

சம்பவத்தில் 29 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரே உயிரிழந்துள்ளார்.

;


No comments