தேசத்தின்குரல் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

டென்மார்க்கில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2022.

டென்மார்க் வாழ் தமிழ் மக்களின்  கரப்பந்தாட்ட கழகங்கள் பங்குபற்றும் சுற்றுப்போட்டியாக, தமிழர் விளையாட்டு துறையினரால் 10 ஆவது தடவையாக 26.02.2022 சனிக்கிழமை அன்று வைல நகரில் சிறப்பாக நடைபெற்றது.

இச் சுற்றுப்போட்டியானது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தி கொண்டு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

நால்வர், ஐவர் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில்  29 அணிகள் பங்கேற்று சிறப்பித்தன.

மிக விறுவிறுப்பாக நடைபெற்ற நால்வர் மற்றும் ஐவர் அடங்கிய இறுதிப் போட்டிகளில், NRSK மற்றும் NTSK கழகங்களை எதிர்த்து போட்டியிட்ட R Young விளையாட்டுக் கழகம், இரண்டு பிரிவுகளிலும் வெற்றியை தமதாக்கிக் கொண்டது.

பார்வையாளர்களின் உற்சாகத்துடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில், ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மூன்று அணிகளுக்கும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டதோடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் கிண்ணங்கள் வழங்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இச் சுழல் கிண்ணத்திற்கான சுற்றுப் போட்டியில், இதுவரை தொடர்ந்து முன்றுமுறை எந்தக் கழகங்களும் வெற்றிபெற்று, சுழல் கிண்ணத்தை தமதாக்கிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற அணிகளின் விபரங்கள்:

45 வயதிற்கு மேற்பட்டார் பிரிவு:

1. இடம்: Middelfart

2. இடம்: உதய சுரியன்

3. இடம் Amiga Mix

சிறந்த விளையாட்டு வீரர்: கிருஸ்ணகுமார் (Middelfart)

4 நபர் பிரிவு:

1.  இடம்: R Young

2.  இடம்: NTSK A (Nyborg)

3.  இடம்: Dantam IF

சிறந்த விளையாட்டு வீரர்: 

மாசுகன்  (R Young)  

5 நபர் பிரிவு:

1. இடம்: R Young

2. இடம்: NRSK A (Næstved)

3. இடம்: Farum

சிறந்த விளையாட்டு வீரர்: 

ஜெசித்  (R Young).


இறுதியாக “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற உறுதியேற்புடன்  இச் சுற்றுப் போட்டி இனிதே நிறைவு பெற்றது.

No comments