திருக்கேதீச்சரத்திற்கு வருகிறார் ஞானசாரர்!இந்து-கத்தோலிக்க மத மோதலை தூண்டிவிட சிங்கள பௌத்த மேலாதிக்கம் முற்பட்டுள்ளது.திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு செல்லும் வழியில் நிறுவப்பட்டுள்ள மாதா சொரூப விடயம் தொடர்பாக ஞானசாரர் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டில் பௌத்த மற்றும் இந்து மக்களே பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். அரச சார்பற்ற அமைப்புக்கள் அறிக்கை தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். இது திட்டமிட்ட அரசியல் செயல் என குற்றச் சாட்டை முன்வைப்பதன் மூலம் கிறிஸ்தவத்திற்கும் ஏனைய சமயங்களுக்கும் இடையில் முரண்பாட்டை வலியுறுத்துவதோடு திருக்கேதீச்சர சமயப் பிரச்சினையை தான் தீர்க்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். 

No comments