ஜேர்மனியில் தமிழர்கள் அதிகமாக வாழும் எசன் நகரில் தீ விபத்து!!


ஜேர்மனியில் தமிழர்கள் அதிகமாக வாழும் நகரங்களில் ஒன்றான எசன்  நகரி மேற்கில் வெஸ்ட்வியர்டெல் என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தில் எழுந்த புகையைச் சுவாசித்த மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கட்டிடத்திலிருந்து 100 பேர் வெளியேற்றப்பட்டனர் என தீயணைப்பு சேவை தெரிவித்தது.


தீயை அணைப்பதற்கு 150க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தீ விபத்துக்கான உடனடிக் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் என காவல்துறையினர் தொிவித்துள்ளனர்.

யாரோ ஒருவர் தீ தீ எனக் கத்தியதால் மக்கள் வீட்டை விட்டு  வெளிய எச்சரிக்கப்பட்டது. 


No comments