48 மணி நேரத்திற்குள் பேசுவதற்கு வாருங்கள்: ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்தது உக்ரைன்!


உக்ரைனில் ஏற்பட்டுள்ள பதற்றம் 48 மணி நேநரத்திற்குள் ரஷ்யாவை பேர்ச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ளது உக்ரைன்.

இதற்கான அழைப்பை உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா விடுத்துள்ளார்.

ரஷ்யா தனது நடவடிக்கைகளை விளக்குமாறு கோரி ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பு (OSCE) மூலம் உக்ரைன் கடந்த வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இதற்கு ரஷ்யா இதுவரை பதிலளிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையிலேயே உக்ரைன் இப்போது ரஷ்யாவுடன் 48 மணி நேரத்திற்குள் சந்திப்பை எதிர்பார்க்கிறது என்று அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.

No comments