99% வீதமானவர்களுக்கு ஒமிக்ரோன்!

 


இலங்கையில்  அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களில் 99% வீதமானவர்கள் ஒமிக்ரோன் பிறழ்வினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டெல்டா பிறழ்வானது படிப்படியாக மறைந்து வருவதாகவும் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

இந்நிலையைில், கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள் மருத்துவமனைகளில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா நோயாளர்களுக்காக அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments