போரைத் தவிர்க்க நேட்டோவில் இணைவதை உக்ரைன் கைவிடலாம்


ரஷ்யாவுடன் போரைத் தவிர்ப்பதற்காக உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கான முயற்சியைக் கைவிடலாம் என பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதுவர் வாடிம் பிரிஸ்டைகோ சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளார்.

நேட்டோ உறுப்புரிமையில் கியேவ் தனது நிலைப்பாட்டை மாற்ற முடியுமா என்று ஊடகம் சார்ந்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரஷ்யாவுடனான போரைத் தவிர்ப்பதற்காக உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கான தனது முயற்சியை கைவிடலாம். உக்ரையின் எல்லைகளில் ரஷ்யப்படைகளை சுற்றிவளைத்து நிலை நிறுத்துவதை தடுப்பதற்கு ஒரு சலுகையாக இந்த முடிவு இக்கக்கூடும் என்றார்.

அத்திலாந்திக் இராணுவக் கூட்டமைப்பில் (நேட்டோ) இணைவதற்கு உக்ரைன் தயாராக இருக்கிறது. 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இராணுவ நகர்வு நடவடிக்கை போருக்கான தூண்டுதலாக இருக்கும். நாங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் அல்லது அச்சுறுத்தப்பட்டு அதற்கு தள்ளப்படலாம் என்றார்.

உக்ரைன் ஒரு நேட்டோ உறுப்பு நாடாக இல்லை, ஆனால் 2008 ஆம் ஆண்டிலிருந்து நேட்டோவில் இணைவதற்கான நிலைப்பாட்டில் உக்ரைன் உள்ளது.

உக்ரைனில் 2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து உக்ரைன் மேற்கு நாடுகளுடன் அதிக உறவைப் பேணி வருகிறது. 

உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் நேட்டோ தலைமையிலான கூட்டணி ரஷ்யாவில் எல்லையில் நிலை நிறுத்தப்படும். ரஷ்யாவை இலக்கு வைத்து நேட்டோவின் ஏவுகணைக்கான ஏவுதளமாக மாறக்கூடும் என்று புடின் கூறுகிறார். அதைத்தடுப்பதை சிவப்பு கோடு என்று புடின் தொிவிக்கிறார்.

No comments