அனைத்துமே விளையாட்டு துப்பாகியாம்?கொழும்பில் பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  கோத்தாவின் புலனாய்வு பிரிவு அறிவித்தவை விளையாட்டு துப்பாக்கிகள் என தெரியவந்துள்ளது.

 பொரளை அனைத்து புனிதர் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரியின் வீட்டில் ஆயுதக் களஞ்சியம் மீட்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார். 

சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.

'துப்பாக்கிகள்' என்று நம்பப்படும் பொருட்கள் உண்மையில் அவரது 11 வயது மகனுக்கு சொந்தமானது என்றும் பல ஏர் ரைபிள்கள் அவருக்கு சொந்தமானது என்றும் ஹேரத் தெரிவித்தார்.

No comments