கோடிகளை தின்ற கூட்டமைப்பு தலைகள்!
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினரான கிருஸ்ணன் வீரபாகுதேவர் முகமாலையில் திருச் சபைக்குச் அருட்தந்தை ஒருவரால் வழங்கப்பட்ட காணியினை போலி ஆவணங்களை தயாரித்து 1 கோடியே 40 இலட்சத்திற்கு விற்பனை செய்த விபரம் அம்பலமாகியுள்ளது.
காணிக்கான ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா பணத்தை குறித்த பிரதேச சபை உறுப்பினரின் வங்கி கணக்கில் கொள்வனவு செய்தவர் வைப்புச் செய்யப்பட்டமைக்கான ஆதாரம் வெளியாகியுள்ளது.
குறித்த காணியினை விற்பனை செய்த பணத்தில் ஒரு கோடியினை மட்டும் தான் எடுத்துக்கொண்டு மீதியை கூட்டமைப்பின் வசமுள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டவர்களிற்கு வழங்கியதாக கிருஸ்ணன் வீரபாகுதேவர் தெரிவித்ததாக எதிர்தரப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இதனிடையே கிருஸ்ணன் வீரபாகுதேவர் கூட்டமைப்பின் வசமுள்ள பச்சிலைப்பள்ளி பிரதேசசபை உறுப்பினராவார்.
Post a Comment