வடமாகாணசபையின் செயலாளர்கள் தூக்கியடிப்பு!வடக்கு மாகாண சபையில் வருடக்கணக்கில் காலூன்றி இருந்துவரும் அதிகாரிகளை தூக்கியடிக்க தொடங்கியுள்ளார் ஆளுநர் ஜீவன் தியாகராஜா.

ஆளுநரால் இன்று மாலை வழங்கப்பட்டுள்ள புதிய இடமாற்ற உத்தரவிற்கமைய தற்போதைய கல்வி, சுகாதாரம், பேரவை மற்றும் ஆளுநர் செயலக செயலாளர்களே இடமாற்றப்படவுள்ளனர்.

இதற்கமைய தற்போதைய உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ப.வரதீஸ்வரன் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராகவும், ஆளுநரது செயலாளர் சரஸ்வதி மேகநாதன் சுகாதார அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தற்போதைய கல்வி அமைச்சின் செயலாளர் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே வளை தற்போதைய பேரவைச் செயலகத்தின் செயலாளர் எஸ்.குகநாதன் பிரதிப் பிரதம  செயலாளர் நிர்வாகமாகவும் அதே நேரம் தற்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில்நந்தனன் பேரவைச் செயலகச் செயலாளராகவும நியமிக்கப்படவுள்ளனர்.


No comments