ரஷ்யாவின் அச்சுறுத்தல்! பால்டிக் தீவுக்கு படையிரை அனுப்பியது சுவீடன்!


உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்கலாம் என்ற அச்சமும் பதற்றத்தையும் அடுத்து சுவீடன் பால்டிக் கடலில் அமைந்துள்ள பெரிய தீவான கோட்லான்ட்டில் சிறியளவிலான 150 பேரை உள்ளடக்கிய படையினரை அனுப்புகிறது.

வடக்கு சுவீடனில் இருந்து அவசரமாக அனுப்பப்பட்ட  படையினரும் அவர்களது இராணுவ தளபாடங்களும் C-17 போக்குவரத்து விமானம் மற்றும் ஒரு துருப்புக்காவிலும் வந்தடைந்தன.

 மொஸ்கோவிலிருந்து சுவீடனின் பிரதேசத்திற்கு அதிகரித்த அச்சுறுத்தலை இது குறிக்காது என  சுவீடனின் மூத்த இராணுவ  அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். 

இருப்பினும் சுவீடனின் பாதுகாப்பு அமைச்சர் சமீபத்தில் ரஷ்யாவின் தாக்குதலை நிராகரிக்க முடியாது என்று கூறினார்.

கோட்லாண்ட் தீவுகள் ஸ்வீடனுக்கு மட்டுமல்ல, முழு பால்டிக் பிராந்தியத்திற்கும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை ரஷ்யாவின் பால்டிக் கடற்படையின் தாயகமான கலினின்கிராட் என்ற ரஷ்ய எக்ஸ்கிளேவிலிருந்து 300 கிமீ தொலைவில் அமைந்துள்ளன.

சமீபத்திய வாரங்களில், மொஸ்கோ பிராந்தியத்தில் இயங்கும் ‘லேண்டிங் ஷிப் டேங்க்’ (LST) என அழைக்கப்படும் கப்பல்களின் எண்ணிக்கையை நான்கிலிருந்து ஆறாக உயர்த்தியுள்ளது. 

இவை நோமன்டி தரையிறக்கத்தை போல் செய்யாது. ஆனால் ஒரு உண்மையான தலைவலியை உருவாக்க போதுமானது என எச்சரிக்கப்பட்டது.

No comments