மின்சார சபையின் தலைவர் பதவி விலகல்?

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை எம்.எம்.சி பெர்டினாண்டோ கையளித்துள்ளார்.

பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனது இராஜினாமா அமுலுக்கு வரும் என அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மின் உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் ஃபர்னஸ் ஒயில் இன்றைக்கு மாத்திரமே போதுமானது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்திக்காக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு வழங்கப்படும் டீசல் கையிருப்பு இன்றுடன் நிறைவடையவுள்ளதுடன், சப்புகஸ்கந்த அனல்மின் நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் உள்ள அனல்மின் நிலையத்திற்கும் விநியோகிக்கப்படும் பர்னஸ் ஒயில் இன்று மாத்திரமே போதுமானது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்பதிவு செய்யப்பட்டுள்ள டீசல் மற்றும் ஃபர்னஸ் ஒயில் இன்று விநியோகம் செய்யப்படாவிட்டால் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments