விவசாய அமைச்சரும் வீட்டிற்கு?

இலங்கையில் கல்வி ராஜாங்க அமைச்சரை தொடர்ந்து விவசாய அமைச்சர் பதவியும் மாற்றப்படவுள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் 10ஆம் திகதி அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றத்தின் போது பல அமைச்சுப் பதவிகள் மாற்றப்படவுள்ளதுடன் விவசாய அமைச்சு பதவியும் மாற்றப்படவுள்ளதாக தெரியவருகிறது.

தற்போது காணி அமைச்சராக உள்ள எஸ்.எம்.சந்திரசேன புதிய விவசாய அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுஜனபெரமுனவின் முக்கிய தலைவர்கள் பலரும் அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் வீடு செல்லவுள்ளனர். 

No comments