இலங்கை பொலிஸ் காவலில் இருந்தவர் வைத்தியசாலையில்!பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர்; ஆபத்தான நிலையில் யாழ்.போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்க்க முயன்றதாக கூறி ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அல்வாய் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியை தாக்கிப் படுகாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தாகவும் அவர் பொலிஸ் நிலையத்தில் இருந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே நேற்றிரவு பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி பொலிஸ் நிலையத்திற்கு சென்று குறித்த நபர் தடுத்துவைக்கப்பட்டிருந்த இடத்தினை பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments